×

கரூர் மாவட்டத்தில் 3 லட்சம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க முடிவு

கரூர், டிச.20: கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 9லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 லட்சம் வாக்காளர்கள் திமுக உறுப்பினர்களாக இணைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் மேற்கு நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு புதிதாக கட்சியில் சேர்வதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கும் பணியினை பார்வையிட்டு, புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் தாரணி சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், திமுக தலைவர் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பகுதிவாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் சுமார் 9 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் இதில் 3 லட்சம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Tags : Karur district ,Pimuka ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு